tamilnadu

img

தொழிலாளர் பேருந்து விஷயத்தில் அரசியல் செய்வது மோசமானது

லக்னோ:
உத்தரப்பிரதேச அரசு காங்கிரஸ் ஏற்பாடு செய்யும் பேருந்துகளுக்கு அனுமதி மறுப்பது மோசமான அரசியல் என்று காங்கிரஸ் மூத்தத் தலைவரும், ராஜஸ்தான் மாநில துணைமுதல்வருமான சச்சின் பைலட் விமர்சித்துள்ளார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர் கள், சொந்த ஊர்களுக்குத் திரும்பகாங்கிரஸ் சார்பில் 1000 பேருந்துகளை பிரியங்கா காந்தி அனுமதி கேட்டிருந்தார். உத்தரப்பிரதேச அரசும் பேருந்துகளின் பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை தரச் சொன்னது. அதன்படி தந்தபோது பிரியங்கா காந்தி கொடுத்த எண்களில் இருசக் கர வாகனங்கள், கார்கள், ஆட்டோ ரிக்சா எண்கள்தான் இருக்கின்றன; பேருந்துகள் இல்லையே என்று கூறி, ஆயிரம்  பேருந்துக ளையும் நாங்கள் சோதனையிட வேண்டும் என்று கூறிவிட்டது. தொழிலாளர்களுடன் வந்த பேருந்துகளையும் வழியிலேயே மடக்கி நிறுத்தி விட்டது.ஆதித்யநாத் அரசின் இந்த நடவடிக்கையையே, சச்சின் பைலட் தற்போது கண்டித்துள்ளார். 

“பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக காங்கிரஸ் கட்சி உணவும், வாகன வசதியும் ஏற்பாடு செய்து தருகிறது. எந்த ஒரு அரசாக இருந்தாலும் இதனை வரவேற்க வேண்டும். ஆனால் உத்தரப்பிரதேச அரசு அனுமதி மறுக்கிறது. எங்கள் கட்சி நிர்வாகிகளை கைது செய்கிறது. மோசமானஅரசியல் செய்கிறது” என்று விமர் சித்துள்ளார்.

;